காஞ்சிபுரம் ஸ்ரீபிரளய காளிக்கு அக்னி நட்சத்திர நிறைவு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஸ்ரீபிரளய காளிக்கு அக்னி நட்சத்திர நிறைவு சிறப்பு அபிஷேகம்
X

காளிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற் காட்சி.

காஞ்சிபுரம் ஸ்ரீ பிரளயகாளி அம்மனுக்கு அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஏகாம்பரநாதர் கருவறை அருகே வலப்புறத்தில் ஸ்ரீ பிரளைய காளி அம்மன் சன்னிதானம் அமைந்துள்ளது.

இக் காளியம்மனுக்கு வருடந்தோறும் அக்கினி நட்சத்திர நிறைவு நாளில் வெப்பம் தணிய சிறப்பு 108 இளநீர் அபிஷேகம் வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடத்திற்கான அக்னி நட்சத்திரம் நிறைவு நாள் இன்று என்பதால் ஸ்ரீ பிரளய காளி அம்மனுக்கு சிறப்பு இளநீர் அபிஷேகமும் , தற்போது பொதுமக்களை வாட்டி வதைக்கும் கொரோனா பெருந்தொற்று நோய் அகன்ற அனைவரும் நோய் நொடி இன்றி வாழ சிறப்பு அபிஷேக பொருட்கள் சிறப்பு அபிஷேகம் சிவாச்சாரியார்களால் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு அபிஷேக நிறைவுக்கு பின் மலர்களால் பிரளயகாளி அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. தற்போது திருக்கோயில்கள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் சிவாச்சாரியரகள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இதில் பங்கு பெற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்