காஞ்சிபுரம் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா
X

வேலிங்கப்பட்டரை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கனக துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சாமி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலிங்கப்பட்டரை அருகே காந்தி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு வந்தன.

இத் திருக்கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்கள் புதிதாக அமைக்கப்பட்டது. இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடைபெற்றது.

அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதன் பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாவினை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

மேலும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture