அயோத்திக்கு செல்லும் புண்ணிய நதிகள் தீர்த்தம் மற்றும் புனித மண்

18 புண்ணிய நதிகளின் தீர்த்தம் மற்றும் மண் அடங்கிய பெட்டகத்தை பூஜை செய்து அருளாசி வழங்கிய ஸ்ரீ விஜயேந்திரர்.
தென்னிந்தியாவின் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்மீக தொலைக்காட்சி நிறுவனமான சங்கரா டிவி அயோத்தியில் உள்ள ராமர் கோயில் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ ராமாம்ருத தரங்கிணி எனும் புனிதப் பயணத்தை திட்டமிட்டது.
அவ்வகையில் இந்தியாவிலுள்ள புண்ணிய நதிகளில் பவித்திர தீர்த்தம் மற்றும் புனித மண் ஆகியவை சிறிய வெள்ளி பாத்திரத்தில் வைக்கப்பட்ட பெட்டகத்தினை தென்னிந்தியாவில் உள்ள ஒரு கோடி இல்லங்களில் வைத்து பூஜை செய்து அதன் நிறைவாக அயோத்தியில் அதை ஒப்படைக்கும் புனித பயணம் நேற்று ஓரிக்கை பகுதியில் நடைபெற்றது.
விழாவில் ஸ்ரீ காஞ்சி விஜயேந்திரர் சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கி பயணத்தை துவக்கி வைத்தார்.
இந்தப் பயணம் தென்னிந்தியாவில் ஒரு கோடி இல்லங்களில் பக்தர்களே தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து மீண்டும் ஒப்படைக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டம் பயணம் சுமார் 18 மாதங்களுக்குப் பின் நிறைவுற்று அயோத்தியில் ஒப்படைக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu