காஞ்சிபுரம்: தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1.40 கோடி மருத்துவ உபகரணம்!

காஞ்சிபுரம்: தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1.40 கோடி மருத்துவ உபகரணம்!
X

காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் கலெக்டரிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய காட்சி.

ஸ்ரீபெரும்புதூர் மோபீஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூ. 1.40 கோடியில் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோன பாதித்தவர்கள் அரசு மருத்துவமனை, அரசு சிகிச்சை தனியார் மருத்துவமனை உள்ளிட்டவைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குறைவு காரணமாக பெரிதும் அவதியுறும் நிலையில் புதியதாக அமைக்கப்பட்ட கேர் சென்டர்களில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களது சமூக பங்களிப்பு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையான மோபீஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் , மொபைல் எக்ஸ் ரே , படுக்கைகள் , மெத்தை உள்ளிட்ட ரூபாய் 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைமை நிர்வாகி பிரேம் சாய் , நிதித்துறை தலைமை அதிகாரி செந்தில்ராஜ்குமார் மற்றும் சமூக பங்களிப்பு குழு பொறுப்பாளர் ஜானகிராமன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிறுவனம் நன்கொடையாக அளித்த மருத்துவ உபகரணங்களை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகாவில் செயல்படும் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!