அமைதியாக முடிந்தது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

அமைதியாக முடிந்தது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு
X

காஞ்சிபுரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில்,  முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அமைதியாக நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 155 பதவிகளுக்கு சுமார் 800 -க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு பொது வாக்குப்பதிவும், அதன்பின்னர், கொரோனா பாதித்த நபர்களுக்கு, சிறப்பு ஒரு மணி நேர வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதன் பின்னர் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

அதன் பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்த மைய முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை பல இடங்களில், சராசரியாக 55 சதவீத வாக்குப்பதிவே நடைபெற்றது. 5 மணி நிலவரப்படி 56.12 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் துல்லிய நிலவரம், இன்றிரவு தெரியவரும்.

Tags

Next Story