காஞ்சிபுரம்:சுற்றி வந்த வாகனங்களை... பறிமுதல் செய்த காவல்துறை...

காஞ்சிபுரம்:சுற்றி வந்த வாகனங்களை... பறிமுதல் செய்த காவல்துறை...
X

சாலைகளில் சுற்றித்திரிந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வண்டியில் ஏற்றுகின்றனர்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி குறுக்கு வழியாக சுற்றிய இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று முதல் 1வார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மளிகை கடை,காய்கறி கடை உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று காலை முதலே காஞ்சிபுரம் நகரில் சங்கரமடம்,பூக்கடை சத்திரம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செவிலிமேடு, ரங்கசாமி குளம் போன்ற பல்வேறு இடங்களில் போலீசார் காலை முதலே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மருத்துவ தேவைகள் சார்ந்தவர்களை மட்டுமே அனுமதித்து மற்ற காரணங்களுக்காக இரு சக்கர மற்றும் நான்கு வாகனங்களில் வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் பிரதான சாலைகள் வெறிச்சோடின.

இதை கண்ட வாகன ஓட்டிகள் குறுக்கு தெருக்களில் போக்குவரத்தானது அதிகரித்து காணப்பட்டது. இதனை இன்று மாலை ரோந்தின் மூலம் அறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா குறுக்கு தெருக்களில் செல்லும் வாகனங்களையும் பறிமுதல் செய்திட உத்தரவிட்டார்.

இதனையெடுத்து பிள்ளையார் பாளையம்,பல்லவர்மேடு,புத்தேரிதெரு, பள்ளத்தெரு போன்ற பகுதிகளில் ரோத்து சென்ற போலீசார் அங்கு தேவைகளின்றி சுற்றிதிரித்த ஏராளமான வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்