காஞ்சிபுரத்தில் பெட்ரோல் விலை ₹100யை தாண்டியது

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் விலை ₹100யை தாண்டியது
X
காஞ்சிபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100ஐ தாண்டியது.
காஞ்சிபுரத்தில் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை படி பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது.

இந்தாண்டு மே மாதம் வரை விலை ஏற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் நாள்தோறும் மெல்ல மெல்ல அதிகரித்து வர துவங்கியது.

கடந்த இரு தினங்களுக்கு முன் 11மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 யை தொட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று பெட்ரோல் விலை ₹100.21 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது.

விலையேற்றம் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ளாமல் தங்கள் வாகனத்திற்கு நிரப்பி செல்கின்றனர். கிராம மக்கள் , வியாபாரிகள் மட்டுமே இது குறித்து கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள கார் ஓட்டுநர்கள் சென்னைக்கு செல்லும் வாகன கட்டணத்தை ₹300 உயர்த்தியுள்ளனர்.

கடந்த ஆறு மாத காலமாக வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் நிர்ணயமற்ற எரிபொருள் விலை தங்களை வெகுவாக வாடிக்கையாளர்களை இழக்க செய்கிறது என தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!