குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை: மேயர் மகாலக்ஷ்மி

குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை: மேயர் மகாலக்ஷ்மி

மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மேயர் மாகலட்சுமி மற்றும் குமரகுருநாதன்.

குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, காஞ்சிபுரம் மேயர் மகாலக்ஷ்மி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில், மேயராக மாகலஷ்மி யுவராஜ் மற்றும் துணை மேயராக குமரகுருநாதன் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மேயர் மற்றும் துணை மேயர், தனது ஆதரவாளர்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, அண்ணா மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், மேயராக தேர்வு செய்யபட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு வாய்ப்பளித்த திமுகவினருக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறென். காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு முதலில் முன்னுரிமை தரப்படும். பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குப்பைகள் கழிவுகள் அகற்றுவதிலும், சுகாதார காஞ்சியை உருவாக்குவோம். துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்படுத்துவேன் என்றார்.

Tags

Next Story