காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் திருமணம்
காஞ்சிபுரம் கோயிலில் நடைபெற்ற திருமணத்தின்போது மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 வகையான சீர்வரிசை பொருட்களுடன் 3 ஜோடிகளுக்கு திருமணம்.காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்றது. திருமண ஜோடிகளுக்கு எம்.எல.ஏ. எழிலரசன் அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான 3 ஜோடிகளுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன்,காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் முன்னிலையில்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டில்,பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மண்டலத்தில் இன்று மட்டும் வல்லக்கோட்டை, குன்றத்தூர், திருப்போரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு திருமணங்கள் நடைபெற்றது. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீடான 30ல் இதுவரை 10 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டு 25 திருமணங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண விழாவில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி,அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், உள்ளிட்டோரும்,மணமகன் மணமகள் வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu