காஞ்சிபுரம் : சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக கற்கும் இஸ்லாமிய மாணவர்கள்

காஞ்சிபுரம் : சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக கற்கும் இஸ்லாமிய மாணவர்கள்
X

சமஸ்கிருதம் கற்கும் மாணவர்கள்.


காஞ்சிபுரத்தில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் சமஸ்கிருத்தை விருப்ப பாடமாக படிக்கும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள். படிக்க ஆர்வமாக உள்ளது என கருத்து தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே லிங்கப்பன் தெருவில் உள்ளது 55வருட ஸ்ரீதண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜகத்குரு சந்திரசேகர் ஸ்வாமிகளின் ஆசிரியரின் பெயரில் இப்பள்ளி துவக்கபட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரே சிறுபான்மையினர் பயிலும் பள்ளியாகவும், மாவட்டத்தில் ஓரே சமஸ்கிருத பாட பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி அமைந்துள்ள ஒலிமுகமது பேட்டையில் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. அங்குள நடுநிலைப் பள்ளியில் உருது ஒரு பாடமாக கற்கும் முஸ்லிம் மாணவர்கள் அடுத்த உயர்கல்வி போகும்போது வீடு அருகே உள்ள இந்தப் பள்ளியை பெற்றோர்கள் தேர்வு செய்கின்றனர்.

இங்கு சேர்க்கைக்கு வரும் முஸ்லிம் பெற்றோர்கள் தனது குழைந்தைகள் பாதுகாப்பாக கல்வி கற்கவும், புதிய மொழியான சமஸ்கிருதப் பாடத்தை தேர்வு செய்யும் போது எந்தவித எதிர்ப்பும் இருவரும் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு சமஸ்கிருதம் சொல்லி கொடுப்பதில் எந்த ஓரு கடினமில்லை என ஆசிரியரும், புதியதை கற்க ஆர்வமாக உள்ளது என மாண மாணவிகள் கூறுவது பெரும் வியப்பை அளிக்கிறது.

இளமையில் கல் எனும் பழமொழிக்கு ஏற்ப பல மொழிகள் கற்று நன்னெறியுடன் வாழ இவர்கள் விரும்புவதும், மதம், மொழி எனும் பாகுபாடு இல்லாமல் மதம் எனும் யானைகளை கூட இவர்கள் முன் மண்டியிட செய்கிறது இச்செயல் எனலாம்..

Tags

Next Story