காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
X

தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தம்மனூர் கிராமத்தில்தூய்மை பணியாளருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த தம்மனூர் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில், தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி தம்மனூர் கிராமத்தில் சிறந்த பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை , பேக், எழுது பொருட்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகருமான விஜய்யின் பிறந்த நாளை மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று தினங்களாக மக்கள் நலதிட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் வினோத் ஏற்பாட்டின் பேரில் தம்மனூர் கிராமத்தில் இரு வேறு இடங்களில் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் வழங்கும் விழா மாவட்ட தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு தலைமையில் நடைபெற்றது.


இவ்விழாவில் அக்கிராமத்தில் பத்தாம் மற்றும் 12 வகுப்புகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதேபோல் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பை , நோட்புக் எழுதுபொருட்கள் என வழங்கப்பட்டும் , விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், தூய்மை பணியாளர்களுக்கு சேலை மற்றும் பொதுமக்களுக்கு பிரியாணி என இரு வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி விழா சிறப்புடன் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ராகுல், கிழக்கு ஒன்றிய நிர்வாகி தம்மனூர் உதயன் , ஒன்றிய செயலாளர் சுகன் உத்திரமேரூர் கிழக்கு துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட அக்கட்சியினரின் செயலை பொதுமக்கள் வரவேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!