காஞ்சிபுரம் திமுக பொதுக்கூட்டம்: இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் திமுக பொதுக்கூட்டம்: இறுதி கட்டப் பணிகள் தீவிரம்
X

திமுக முப்பெரும் பவள விழா நடைபெறும் அரங்க நுழைவு வாயில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கட்டவுட்டுகள் மற்றும் முகப்பு வாயிலில் அண்ணா இல்லம்

இன்று மாலை நடைபெறும் திமுக முப்பெரும் பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் உரையாற்றுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் திமுக முப்பெரும் பவள விழா பொதுக்கூட்டத்திற்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திமுக கூட்டணியின் பங்கேற்கும் தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர்களும் , உதயநிதியை முன்னிறுத்தி கட்அவுட் , பேனர்கள் பொதுகூட்ட திடல், நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு வட்டம் சார்பில் திமுக முப்பெரும் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். மேலும் திமுகவில் கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் , விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான மேடை மற்றும் பார்வையாளர் அரங்குகள் என அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.


500 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட அரங்கில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேடையின் நுழைவு வாயில் அண்ணா நினைவு இல்லம் மற்றும் பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி கட் அவுட்டுகளும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்ட அரங்குக்கு செல்லும் வாயில் வழியில் எங்கிலும் கூட்டணி கட்சித் தலைவர்களின் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓரிரு மாதங்களாகவே துணை முதலமைச்சர் ஆக உதயநிதி நியமிக்கப்பட வேண்டும் என திமுகவில் ஆதரவு பெருகி வரும் நிலையில், விரைவில் நியமிக்கப்படுவார் என அமைச்சர்களும் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதல்வர் தெரிவித்த நிலையில் இந்த பொதுக்கூட்டம் மிகவும் எதிர்பார்ப்புடன் திமுகவினரிடையே உள்ளது.

கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற விசிக குரல் சற்று திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று இதில் கலந்து கொள்ளும் விசிக தலைவர் இதுகுறித்து முற்றுப்புள்ளி வைத்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த திமுக பொதுக்கூட்டத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாநகரில் மதியம் ஒரு மணி முதல் இரவு 12 வரை மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

விழா அரங்கம் முழுவதும் காவல்துறையினரால் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்ள வரும் நபர்களுக்கு தேவையான குடிநீர் கழிவறை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!