கஞ்சா போதையில் வீட்டில் புகுந்து பெண் மற்றும் குழந்தைகளை மிரட்டிய வாலிபர் கைது

கஞ்சா போதையில் வீட்டில் புகுந்து பெண் மற்றும் குழந்தைகளை மிரட்டிய வாலிபர் கைது
X

கஞ்சா போதையில் ரகளை ஈடுபட்ட வாலிபர் அஜித்

வெங்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் அஜீத் கஞ்சா போதையில் ஏகனாம்பேட்டை பகுதியில் வீட்டில் புகுந்து பொருட்களை உடைத்து ரகளை.

காஞ்சிபுரம் அருகே ஏகனாம்பேட்டை கிராமத்தில் கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த வாலிபர்.வீட்டின் உரிமையாளர் கதவை மூடிவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் வீட்டுக்குள் இருந்த வாலிபரை விரைந்து வந்து பிடித்துச் சென்ற வாலாஜாபாத் குற்ற தடுப்பு பிரிவு போலீசார்.

காஞ்சிபுரம் அருகே ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் கையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வசிக்கும் குமார் என்பவரிடம் தகராறு செய்து உள்ளார்.அதனைத் தொடர்ந்து கையில் பட்டா கத்தி உடன் அருகில் இருந்த கலைவாணி என்பவரது வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்த குழந்தைகளை மிரட்டி உள்ளான். இதனால் மிரண்டு போன குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடிய வந்த நிலையில், வெளியே இருந்த குழந்தைகளின் தாய் கலைவாணி தனது வீட்டை வெளிப் பக்கமாக பூட்டி உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் உள்தாழ்பாள் போட்டு கொண்டு உள்ளே இருந்த வீட்டு உபயோக பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.இச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் கலைவாணி வாலாஜாபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார், கஞ்சா போதையில் இருந்த வாலிபரை அழைத்தும் வெளியே வராததால் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கஞ்சா போதையில் மயங்கிடந்த வாலிபரை பிடித்து வெளியே அழைத்து வந்தனர் மேலும் அவன் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா போதையில் வாலிபர், செய்வது அறியாமல் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்த சம்பவம், ஏகனாம்பேட்டை பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை சாமர்த்தியமாக உள்ளே வைத்து தாளிட்டு போட்டு காவல்துறைக்கு தகவல் அளித்த அப்ப நீ செய்கை அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!