வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்.
கோயில் நகரம், பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் 1866ல் நகராட்சி துவங்கப்பட்டது. 1947ல் Grade -1னாக உயர்வு பெற்றது.
1983ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008ல் சிறப்பு தேர்வு நிலை , பெருநகராட்சி என பல பரிமாண வளர்ச்சிக்கு பின் கடந்த சில மாாதங்களுக்கு முன்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாநகராட்சி என சிறப்பை பெற்றது.
இந்நிலையில் இதற்கான வரன்முறை அரசாணை வெளியிடபட்டதால் மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பொதுமக்கள் உள்ளனர்.இதை கொண்டாடும் வகையில் அலுவலகம் முன்புறம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் காணப்படுகிறது.
தற்போதைய காஞ்சிபுரம் மாநகராட்சி குறித்த பொது தகவல்களை பார்ப்போம்.
மக்கள் தொகை - 232816 (2011 கணக்கின்படி )
மொத்த வார்டுகள் - 51
குடிநீர் இணைப்பு - 32ஆயிரம்
புதை வடிகால் - 22ஆயிரம்
மொத்த வீடுகள் - 51 ஆயிரம் .
குடிநீரேற்று நிலையம் : ஓரிக்கை, திருப்பாற்கடல்
21.00 மில்லியன் லிட்டர் நாள்தோறும் 99 குடிநீர்தொட்டிகள் மூலம் வழங்கப்படுகிறது.
கைபம்புகள் - 150 , சிறுமின்விசை டேங்க்- 590 உள்ளது.
குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதி தேவைகளுக்காக 4 குடிநீர் லாரிகளும் இயங்குகிறது.
நகரம் முழுவதும் 11ஆயிரம் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பெருநகராட்சி கட்டுபாட்டில் 247.58 கீமீ சாலை பராமரிப்பு செய்யபடுகிறது.
புதிய பேருந்து நிலையம் அமைக்க கீழ்கதிர்பூர் பகுதியில் 10 ஏக்கர் நில பரப்பளவில் ரூ38 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ளது.
16பூங்காங்கள் ரூ7.40கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பல மத்திய அரசு திட்டங்கள் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் செயல்படுத்தபட்டுள்ளது.
மாநகராட்சியாக தற்போது தரம் உயர்படுத்தபட்டுள்ளதால் தோராயமாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 கிராமங்கள் இணைக்க வாய்ப்பு உள்ளது.
இதிலுள்ள 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இணைக்கபட்டபட்டால் வருவாய் உயர்வு ஏற்படும். மேலும் பல வசதிகள் மேற்கொள்ள உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu