காஞ்சிபுரம்: கொரோனா பணிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!

காஞ்சிபுரம்: கொரோனா பணிக்கு  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!
X

காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி

கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை பதிவு செய்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கேட்டு கொண்டுள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் எனவுமா தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 044 – 27239334. தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story