காஞ்சிபுரம் பட்டாசு கடைகளில் ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் பட்டாசு கடைகளில் ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. திடீர் ஆய்வு
X

காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்ட பட்டாசு கடையில் ஆட்சியர், எஸ் பி. ஆய்வு நடத்தினர்.

காஞ்சிபுரம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்புகள் குறித்து ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் தீபாவளியையொட்டி அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் , எஸ் பி ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இன்னும் 4 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வியாபாரிகள் அரசு விதிகள்படி பட்டாசு கடை அமைத்துள்ளனர்.

மேலும் பட்டாசு வாங்க வரும் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஒழுங்குமுறை அமைத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் புத்தேரி தெரு மற்றும் சங்குபாணி விநாயகர் தெருவில் அமைந்துள்ள பட்டாசு மொத்த விலை கடைகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எஸ் பி சுதாகர் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிநிஷா பிரியதர்ஷினியுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அரசு விதிகளை முறையாக பின்பற்றி பொதுமக்களுக்கு முற்றிலும் பாதுகாக்கும் வண்ணம் விற்பனை செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். தீயணைப்பு கருவிகள் அதற்கு உண்டான உப பொருள்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

மேலும் பட்டாசு கடையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் வைக்க வேண்டும்.பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு துறை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உடன் இருந்தார்.

Tags

Next Story