காஞ்சி ஒன்றியத்தில் 5 கிராம ஊராட்சிகளுக்கு செயலாளர் நியமனம் எப்போது ?
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ளது. அதில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 40 கிராம பஞ்சாயத்துக்களில் , ஊராட்சி செயலர்களை கொண்டு கிராம வளர்ச்சி பணிகள் மற்றும் செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராம பஞ்சாயத்துக்களுக்கு செயலர்கள் நேரடி பணியிலும், 5 ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 5 பஞ்சாயத்துக்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு பஞ்சாயத்து பணிகளை கண்காணித்து, பணிகளை செய்வதில் சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அந்தந்த ஊராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர் பதவி காலியாக உள்ள ஐந்து பஞ்சாயத்துக்களுக்கு உடனடியாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும்.
ஒரு ஊராட்சி செயலாளர் ஒரே நேரத்தில் இரு கிராம தேர்தல் பணிகளை செய்வது என்பது இயலாத காரியம் ,சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் எழும் நிலையில்,
அங்கும் இங்கும் என செல்வது கடினம் எனவே விரைந்து ஊராட்சி செயலாளர் பதவிகளை தேர்தலுக்கு முன் நிரப்ப மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu