காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட உதவி

காஞ்சிபுரம் அ.தி.மு.க.முன்னாள் நகர செயலாளர் நினைவுதினத்தையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.வின் காஞ்சி மாநகர முன்னாள் செயலாளரும் , ஜெயலலிதா பேரவை செயலாளராக சிறப்பாக பணியாற்றி கழக வளர்ச்சி உறுதுணையாக இருந்து வந்த சுப்பிரமணியம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அப்பகுதி பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே. யு. எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி , ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி மற்றும் 101 நபர்களுக்கு 25 கிலோ எடை கொண்ட அரிசி வழங்கப்பட்டது.
இதேபோல் அப்பகுதி பொதுமக்களுக்கு தயிர், சாம்பார் , வெஜிடபிள் பிரியாணி குடிநீர் உள்ளிட்ட அறுசுவை உணவுகளும் சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதேபோல் பிள்ளையார் பாளையம் பகுதியில் இரு வேறு இடங்களிலும் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலியொட்டி அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் திலக் , பகுதி கழக செயலாளர் கோல்ட் மோகன் , மாமன்ற உறுப்பினர்கள் குட்டி என்கிற சண்முகானந்தம் , சிந்தன் , பிரேம், நிர்வாகிகள் வாசு , ராஜசிம்மன் , c.ரவி, நீலாவதி உள்ளிட்ட அதிமுக மாநகராட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu