ஜெயலலிதா பிறந்தநாள் விழா: காஞ்சி மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா:  காஞ்சி மாவட்ட அதிமுக கொண்டாட்டம்
X

காந்தி சாலையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது  பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்திய போது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொது செயலாளர் ஆக இருந்த ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானங்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மிலிட்டரி சாலையில் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காய்கறி மற்றும் பழ வகைகள் படையல் இட்டு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் தீப ஆராதனை காட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது


இதேபோல் காந்தி சாலையில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் அதிமுக கொடி ஏற்றி, மலர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பூக்கடை சத்திரம் பகுதியில் பகுதி கழக செயலாளர் டவுன் பேங்க் பாலாஜி தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி ஏராளமான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் கோல்டு மோகன், ரவி , ஜெயராஜ், டவுன் பேங்க் பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக், ராகவேந்திரா குமரேசன், மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

பிறந்தநாள் நிகழ்வில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil