காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
X

கைதான லோகநாதன், பிரசாந்த், விவின் கேபா

காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவில் அருகே, ஒரகடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி என்பவர், கடந்த 6-ம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி சிவகாஞ்சி காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலம் சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூரை சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையொட்டி இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த 2 செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai future project