காஞ்சிபுரம் 31வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோமதி பார்த்தசாரதி தீவிர பிராச்சாரம்

காஞ்சிபுரம் 31வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோமதி பார்த்தசாரதி தீவிர பிராச்சாரம்
X

31 வது வார்டில் போட்டியிடும் கோமதி பார்த்தசாரதி வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 31 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோமதி பார்த்தசாரதி வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சியில் ஐம்பத்தொரு வார்டுகள் அடங்கியுள்ளது. இதில் திமுக 42 வார்டுகளிலும் காங்கிரஸ் 4 வார்டுகளிலும் , விசிக ஒரு வார்டுகளிலும், மதிமுக, தவாக , முஸ்லிம் லீக் கட்சி தலா ஒரு வார்டுகளில் போட்டியிடுகிறது.

அவ்வகையில் காங்கிரஸ் சார்பாக 41 வார்டில் பத்மநாபன், 31வார்டில் கோமதி பார்த்தசாரதியும்,46வது வார்டில் சாதிக் பாஷா, இரண்டாவது வார்டில் குரு என்பவரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 31 வது வார்டில் போட்டியிடும் கோமதி பார்த்தசாரதி வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே காலை முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்கு வேட்டை நடத்தி கொண்டு வருகின்றார்.

இவரிடம் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பிரமுகர்களும் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!