அதிமுக சட்டப் பிரச்சினையில் வெற்றி பெற காஞ்சிக்கோயில் சிறப்பு பூஜை

அதிமுக சட்டப் பிரச்சினையில் வெற்றி பெற காஞ்சிக்கோயில் சிறப்பு பூஜை
X

அதிமுகவின் நிரந்தர ஒருங்கிணைப்பாளராக நீடிக்க கோரியும் சட்ட ரீதியான வழக்கில் வெற்றி பெற வேண்டி ஓபிஎஸ் அணி சார்பில் காஞ்சி வழக்கத்தில் ஈஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜை மேற்கொண்ட காஞ்சி மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் நிர்வாகிகள்.

ADMK News In Tamil - அதிமுகவை மீட்க சட்ட ரீதியாக போராடும் ஓபிஎஸ் வெற்றி பெற காஞ்சிபுரம் பிரசித்திபெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

ADMK News In Tamil - கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல்வேறு நிவர்த்தி ஸ்தலங்கள் உள்ளது. குறிப்பாக சட்ட ரீதியான வழக்குகளில் வெற்றி பெறவும் , குடும்ப உறவுகள் மேம்பட வழிபாட்டு தலமாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வழக்கறுதீஸ்வரர் திருத்தலமாகும்.

இங்கு 12 வாரம் தொடர்ந்து அர்ச்சனை மேற்கொண்டு தீம் வழிபாடு மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏற்கனவே பல அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்கள் , திரைப்பட பிரபலங்கள் என பலர் தொடர்ந்து பூஜை மேற்கொண்டு வருகின்றனர்.

ADMK News In Tamil - இந்நிலையில் அதிமுக பொதுக்குழு பிரச்சினை குறித்து வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையிலும், அஇஅதிமுகவின் நிரந்தர கழக ஒருங்கிணைப்பாளராக அமைய வேண்டியும் , அவர் எடுக்கும் அனைத்து சட்ட போராட்டங்களிலும் வெற்றி பெற என காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் இத்திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை 7மணிக்கு ஸ்ரீவழக்கறுத்தீஸ்வருக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் தீப ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தென்னங்கன்று மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அம்மன் வைரமுத்து , செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தென்னரசு , காஞ்சி புல்லட் பரிமளம் , மகளரணியை சேர்ந்த கோமளவள்ளி , காவந்தண்டலம் சங்கர் , மாநகரில் சசிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!