பூமிக்கடியில் உள்ள நடவாவி கிணறு மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதர்

நடவாவி சாலை கிணற்றிலிருந்து மண்டபகடி முடிந்து வெளியே வந்து தரிசனம் அளித்த காஞ்சி வரதர்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருளி பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடவாவி கிணறு உற்சவம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி கட்டுப்பாடுகள் தளர்வடைந்தை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நடவாவி உற்சவம் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமி நடவாவி கிணறு உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து கிளம்பி ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி,கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
சஞ்சீவிராயர் திருக்கோயிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து,பச்சை, அரக்குகரை, வெண்பட்டு உடுத்தி திருவாபரணங்கள்,பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்து பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து,மேலேறி வந்த வரதராஜ பெருமாளை காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu