வேகமெடுக்கும் பட்டு பூங்கா பணிகள், சோதனை ஓட்டத்தில் பட்டுதறி

வேகமெடுக்கும் பட்டு பூங்கா பணிகள், சோதனை ஓட்டத்தில் பட்டுதறி
X

காஞ்சிபுரத்தில் 90 கோடியில் பட்டு பூங்க அமைக்க தீவிர பணி நடைபெற்று வருகிறது. செப்-15ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தற்போது  சோதனை முறையில் நெசவாளர் சேலை நெய்து வருகிறார்

காஞ்சிபுரம் பட்டு பூங்கா பணிகள் தற்போது வேகமெடுக்க துவங்கியுள்ளது. தறியில் நெசவாளர்கள் சோதனை முறையில் சேலை நெய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டு ஜவுளி மேம்பாட்டு துறை மற்றும் தமிழக கைத்தறி துறை பங்களிப்பு உடன் 90கோடி மதிப்பீட்டில் பட்டு பூங்கா திட்டம் துவக்க அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணி தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பணிகளை துரிதப்படுத்த தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அண்ணா பிறந்த தினமன்று பட்டுப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தனர்.


இந்நிலையில் இதற்கான தறி கூடம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினர்.

வரும் செப்டம்பர் 15ம் தேதி திறக்க உள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள தறியில் நெசவாளர்கள் சோதனை முறையில் சேலை நெய்து வருகிறார். மேலும் தறிகூடம் மற்றும் கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ளது.

செப்டம்பர்15 அண்ணா பிறந்தநாளில் பட்டுபூங்கா சில பணிகள் துவங்குவது நிச்சயம் என தெரிய வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!