பக்தர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காஞ்சி காமாட்சி அம்மன்..!

பக்தர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காஞ்சி காமாட்சி அம்மன்..!
X

சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி சரஸ்வதி உடன் எழுந்தருளிய ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்

தீபாவளியையொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி , வெட்டி வேரிலான கிளியை கையில் ஏந்தி , லட்சுமி சரஸ்வதி தேவியுடன் வீதி உலா வந்தார்

தீப திருநாளை யொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுடன் பட்டாசு வெடித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று அதிகாலை தீப திருநாளையொட்டி அதிகாலை 6:00 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கக் கவசத்தில் மூலவர் காமாட்சியம்மன் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சாமி தரிசனம் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, வெட்டிவேரிலான கிளியினை கையில் ஏந்தி லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் ராஜகோபர வாசலில் எழுந்தருளினார்.


இதனைத் தொடர்ந்து தீப ஒளி சிறப்பு தீபாராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சரவெடி பட்டாசுகள் வைக்கப்பட்டு, தீபம் ஆராதனைக்கு பின் காமாட்சி அம்மன் முன்னிலையில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


சுமார் 15 நிமிடம் நடைபெற்ற பட்டாசு வெடிப்புகளுக்கு பிறகு காமாட்சி அம்மன் ராஜ வீதிகளில் வீதி உலா புறப்பட்டார்.

தீபத் திருநாளை ஒட்டி திருக்கோயில் பக்தர்கள் சார்பாக அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

தீபாவளி திருநாளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை சந்திக்கும் ஏராளமானோர் நீண்ட வரிசையில் இன்று காத்திருந்து சாமி தரிசனம் பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்