மக்கள் பணியில் காஞ்சி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது: எம்எல்ஏ தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் அண்ணா பட்டு பூங்காவில் பட்டு தறிஆய்வு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவரும் , கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி , சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன் , சட்டமன்ற பேரவை தலைமை நிருபர் வரதராஜன், சட்டமன்ற பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மசமுத்திரத்தில் சுயநிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு, குடியிருப்புவாசிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் ரூ.190.08 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்கமாடி குடியிருப்பினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செய்யப்படவேண்டிய கூடுதல் கட்டமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்பு ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் கீழிகதிர்பூரில் இயங்கி வரும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்காவினையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள 6 தறிக்கூடங்களில் உள்ள தறிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு நெசவு செய்யும் இரகங்களை பற்றி பட்டுப்பூங்காவில் பணியாற்றும் நெசவாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ் ஆய்வுக் கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களிடம் குழுவின் தலைவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், முதலாக, தமிழ்நாடு கதர் வாரியத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.இதில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 20,400 ரூபாய் மதிப்பிலான மின்விசிறி சக்கரம் 47 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஒரு மின்விசிறி சக்கரத்தில் 37பொருட்களை தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த குறுகிய ஆண்டில் 1548 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூபாய்.5000வீதம் 62.18கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் ஏதும் விற்க முடியாத சூழ்நிலையால் அவர்கள் நலன் கருதி மேலும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது.தொழிலாளர்கள் ஊக்குப்படுத்துவதற்க்கு அவர்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண் ஆகியன மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஓப்புதல் வழங்கியுள்ளார்,மேலும் பல மாவட்டங்களில் வழங்கவும் உள்ளனர்.
நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ளது.24 கூடங்கள் 2500 கைத்தறிகளுடன் கூடிய பட்டு பூங்காவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1800 நபர்கள் வேலை செய்யம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர், பழங்குடியினர் 2000க்கும் மேற்பட்டோர்க்கும் மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது.மேலும்,11000க்கும் மேற்பட்ட பிற வகுப்பினருக்கு பட்டா மற்றும் பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் முகவரி திட்டத்தின் மூலம் பெறபட்ட மனுக்களில் 3142நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை சொந்தமான 3500ஏக்கர் மற்றும் நீர்நிலைக்கு சொந்தமான 1383 ஏக்கர் நிலங்கள் ஆக்கரமிப்புகளிடமிருந்து அகற்றப்ட்டுள்ளது.சிறுபான்மையினர்,பிறபடுத்தப்பட்டோர்,மகவும் பிறபடுதப்பட்டோருடைய கல்வி உதவித்தொகை தடையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற மக்கள் நலதிட்டங்களை தானே விரும்பி சென்று உரிய நேரத்தில் உரிய திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கக்கூடிய வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாகவும், இக்குழு மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu