காஞ்சிபுரம் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறப்பு விழா எப்போது?

காஞ்சிபுரம் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறப்பு விழா எப்போது?
X

காஞ்சிபுரம் 46 வது வார்டு வானவில் நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டிடம்.

காஞ்சிபுரத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் 23 ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஊரக பகுதியிலும் , நகரங்களில் ஐந்து சுகாதார நிலையங்கள் என மொத்தம் 28 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் 143 துணை சுகாதார நிலையங்கள் ஊரக பகுதிகளிலும் , 26 நகர பகுதியில் என மொத்தம் 169 நிலையங்கள் செயல்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் , மகப்பேறு , பொது மருத்துவம் , அவசர சிகிச்சை முதலுதவி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு செய்து வருகிறது.


இது மட்டும் அல்லாமல் நகரப் பகுதிகளில் இயங்கும் சுகாதார நிலையங்களில் கூடுதலாக பல் மருத்துவம், பிசியோதெரபி, யோகா தெரப்பி, மனநல ஆலோசனை என பல வகைகளில் கூடுதல் மருத்துவ சேவையும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக செய்து வருகிறது.

மேலும் இது போன்ற சேவைகள் செய்ய தேவையான அனைத்து உதவிகளும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் அறிவுரையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும் தற்போது மூன்று ஆண்டுகளாக பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளதை கணக்கில் கொண்டு , தலைமை மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் கூடுதலாக இரண்டு நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் பல லட்சம் மதிப்பீட்டில் கட்ட தீர்மானிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் என கடந்த மூன்று மாதங்களாக இந்த இரு கட்டிடங்களும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த இரு கட்டிடங்களும் புதர்மண்டியும் சமூக விரோதிகளுக்கு புகலிடமாகவும் நுழைவு வாயில் உள்ளது.

பொதுமக்கள் இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்தால் அதிக அளவில் மருத்துவ பயன்பாடுகள் அப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கிடைக்கும் என்பதால் இதனை விரைவாக மாவட்ட நிர்வாகம் உணர்ந்து உரிய துறை அனுமதியுடன் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!