காஞ்சிபுரம் நாடார் கூட்டமைப்பின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்த காஞ்சிபுரம் நாடார் கூட்டமைப்பினர்
காஞ்சிபுரம் நாடார்கள் கூட்டமைப்பு சார்பில், பெருந்தலைவர் காமராஜ் 122 வது பிறந்தநாள் விழா பால்குடம் மற்றும் முளைப்பாரி திருவிழாவுடன் காஞ்சிபுரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இது மட்டுமில்லாத அரசியலமைப்பினர், சமூக ஆர்வலர்கள், நாடார் அமைப்பினர் என பல தரப்பினரும் காமராஜரின் பிறந்தநாள் விழாவினை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் மூன்றாம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி காந்தி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கூட்டமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் வேலுமணி, பொருளாளர் பாலகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி காலையில் கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் இருந்து, செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுக்கு பின் முளைப்பாரி மற்றும் பால்குடம் ஏந்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என ஊர்வலமாக ரயில்வே சாலை வழியாக ஒரு ஊர்வலமாக வந்து காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர்கள் வெள்ளைச்சாமி, ராஜகோபால் குமார் உள்ளிட்ட ஏராளமான நாட்டார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu