குப்பை தேர்வு செய்வதே திடக்கழிவு மேலாண்மைக்கு வெற்றி: நீதிபதி பேச்சு

குப்பை தேர்வு செய்வதே  திடக்கழிவு மேலாண்மைக்கு வெற்றி: நீதிபதி பேச்சு
X

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்‌குறித்து நீதியரசர் டாக்டர் ஜோதிமணி  விளக்கி பேசினார்.

மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர் திடக்கழிவுகளை பிரிக்க முழுமையாக கற்றுக் கொள்ளவேண்டும் என ஆய்வு கூட்டத்தில், நீதிபதி ஜோதிமணி பேசினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி திடக்கழிவு திட்ட செயல்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டக்குழு கண்காணிப்பு அலுவலர் நீதியரசர் டாக்டர் P. ஜோதிமணி, மஞ்சள் நீரோடை, திருக்காளிமேடு பகுதியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் உடன், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நீதியரசர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் மேயர் மாகலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய நீதியரசர் ஜோதிமணி‌, திடக்கழிவு மேலாண்மை குறித்து அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய சமயம் தற்போது எனவும், அதை பிரித்தெடுக்கும்‌முறை அறிந்தாலே வெற்றி நிச்சயம் எனவும், காஞ்சிபுரம் சுற்றுலா நகரமாக இருப்பதால் வருவபவர்களின்‌ உடல் நலனை பேணிகாக்கும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்தி தூய்மை காஞ்சியாக்குவோம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்‌என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story