/* */

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு: காஞ்சிபுரம் மாவட்ட திமுக கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி பொதுக் கூட்டங்களில் திமுகவினர் வலியுறுத்துகின்றனர்

HIGHLIGHTS

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு:   காஞ்சிபுரம் மாவட்ட திமுக கோரிக்கை
X

தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தாமோதரன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு

கோயில் நகரம் , பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் , கடந்த 25 ஆண்டுகளில் மெல்ல மெல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகி தற்போது தொழிற்சாலை நகரம் எனவும் பெயர் பெற்றுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் , ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் , இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இத் தொழிற்சாலைகள் அமைக்க ஆளும் கட்சி அரசுகள் அதற்குத் தேவையான நிலம், மின்சாரம் , குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நிலையை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தொழிற்சாலைகள் அமைக்கும் கிராம ஊராட்சிகளில் அப்பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு 10 சதவீத வேலைவாய்ப்பை கூட வழங்குவதில்லை என குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.ஆனால் இதை ஆளும் அரசுகளோ, எதிர்க்கட்சிகளோ ஒருபோதும் இதனை சட்ட வடிவில் தொழிற்சாலை அமையும்போது உருவாக்குவதில்லை என குற்றச்சாட்டும் பெரிதளவு உள்ளது.

இந்நிலையில் தற்போதைய ஆளும் கட்சியான திமுக வினர் குறிப்பாக காஞ்சி மாவட்ட திமுகவினர் கடந்த சில நாட்களாகவே நடைபெற்றுவரும் சாதனை விளக்கக் பொதுக்கூட்டங்கள் மற்றும் இதர தொழிற்சாலை நிறுவன நிகழ்ச்சிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளியுங்கள் என தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் புதிய கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

தொழிற்சாலை நிகழ்ச்சிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி மட்டும் இளைஞர்களுக்கு போதுமானதாக இருக்காது எனவும் பயிற்சிக்குப் பின் அளிக்கப்படும் உரிய வேலை வாய்ப்பு மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு தொழிற்சாலை நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

25 ஆண்டுகளில் தொழிற்சாலை நிறுவனங்களிடம் திமுக எந்தக் கோரிக்கையும் முன்வைக்காத நிலையில் தற்போது இளைஞர்களுக்காக வைப்பதாக பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , எழிலரசன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, என அனைவரும் ஒரு சேர காஞ்சி மாவட்டத்தில் இக் கோரிக்கை பொதுகூட்டங்களில் வைக்கின்றனர்.

மேலும் கூட்டத்தில் உரையாற்றும் போது கிராம ஊராட்சி நிர்வாகிகள் கிராமத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் குறித்த தகவல்களை திரட்டி மாவட்ட,ஓன்றிய நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும் எனவும், விரைவில் தாங்கள் தீர்வு காணுவோம் எனவும் பொதுக்கூட்டங்களில் கூறி வருகின்றனர்.இதனைப் பார்க்கும் பொதுமக்கள் இந்த புதிய கோரிக்கையை இளைஞர்களுக்காக கூறி வருகிறார்களா அல்லது உண்மையில் செயல்படுத்தப் போகிறார்களா என்பதை பார்க்கலாம் என கூறுகின்றனர்.


Updated On: 6 Jun 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...