காவல்துறை நகை திருட்டு வழக்கில் தொந்தரவு செய்வதாக பெண்கள் புகார்

காவல்துறை நகை திருட்டு வழக்கில் தொந்தரவு செய்வதாக பெண்கள் புகார்
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்த பெண்கள்.

நகை திருட்டு வழக்கில் காவல்துறை கைது செய்து சித்தரவதை செய்வதாக குழந்தைகளுடன் வந்து பண்டி இன பெண்கள் புகார் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பண்டி இன மக்கள் சிக்கு முடி மற்றும் அழகு சாதன பொருட்களை கிராமங்களில் சென்று விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது கணவர்களை திருட்டு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட பெருநகர் காவல்நிலைய சிறப்பு தனிப்படையினர் கடந்த பத்து வருடங்களாக கைது செய்வதும் அவ்வப்போது திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதாகவும் இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து ஓரு பெண்மனுதாரர் கூறுகையில் , நாள்தோறும் வாழ்வாதாரத்திற்காக கிராமம் கிராமமாக சென்று பிழைப்பு நடத்தி வரும் நிலையில் தங்கள் கணவர்களை திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி தங்க நகைகளை திருடியதாக காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்வதாகும், தங்கள் தாலியில் ஒரு துளி தங்கம் கூட இல்லாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

காவல்துறை மிரட்டி தங்களிடமிருந்த சிறிதளவு சேமிப்பு நகைகளை கூட ஒட்டுமொத்தமாக பறித்துக்கொண்டு எங்களை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இதனால் குழந்தைகள் பள்ளி செல்ல கூட மறுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஜெய்பீம் சினிமா பட ஒரு குறிப்பிட்ட இனத்தவரை பொய் வழக்குகளில் இனைத்து துன்புறுத்துவது போன்றே இந்நிகழ்வு நடைபெறுவதாகும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story