மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என குற்றச்சாட்டு
X

மகப்பேறு காலங்களில் பரிசோதனைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய அட்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் மகப்பேறு திட்டத்தில் மகப்பேறுக்கான நிதி பெறுவதில் பயனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறு கால நிதியாக ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

ரூபாய் 2000 வழங்க ஆரம்பித்த நிலையில் பல்வேறு நிலைகளுக்கு பிறகு இந்த உயர்வு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தில் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழும் , அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் நடைபெற்று இருக்க வேண்டும்.


கர்ப்ப ஆரம்ப காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பரிசோதித்து பெண்களுக்கு தாய் சேய் நல திட்டத்தின் கீழ் இவர்களை பதிவு செய்வார்கள்.

அதன் அடிப்படையில் ஏழாம் மாதம் , பிரசவத்த பின் , தடுப்பூசி செலுத்திய பின், ஊட்டச்சத்து பெட்டகம் என பல கட்டங்களில் இந்த பணம் அவர்கள் அளித்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு தாய்க்கு இரு மகப்பேறுகளுக்கு மட்டுமே இத்திட்டம் ஏற்கப்படும்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பல பகுதிகளில் பிரசவித்த பெண்களுக்கு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த உதவித்தொகை வரவில்லை என கிராம சபை கூட்டங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏகனாபுரத்தை சேர்ந்த பயனாளி கணவன் சூர்யகுமார் கூறுகையில், முதல் குழந்தை பிறந்து, தற்போது இரண்டாவது குழந்தைக்கு ஏழு மாதம் ஆகிய நிலையில் கூட இதுவரை 2000 மட்டுமே பெற்றுள்ளதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை என்றார்.

இதேபோல் பொடாவூர் பகுதியைச் சேர்ந்த பவானி கூறுகையில், முதல் குழந்தைக்கு முழு தொகை கிடைத்த நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு 2000 மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரமங்கலம் அலுவலக கண்காணிப்பாளர் கூறுகையில், இதற்கு முழுக்க முழுக்க பயனாளிகளின் கவன குறைவே காரணம் எனவும் , ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குகள் தருவதில் குளறுபடிகள், ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை தருவதில்லை. இதனால் குறைந்தபட்சம் இருப்பு தொகை உள்ள வங்கி கணக்குகளையே தருவதால் அதை முறையாக பராமரிப்பதும் இல்லை.

பெண்கள் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அளிக்கப்பட்ட வங்கி கணக்குகளும் தருவதும், வங்கிகளில் கேஒய்சி புதுப்பித்தல் செய்யாததும் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து பணம் வழங்குவதால் சில சமயம் காலதாமதமும், மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு யோஜனா எனும் இணையதளத்தின் குளறுபடிகளும் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இருப்பினும் ஒரே ஒரு ஆரம்ப சுகாதாரத்தின் நிலயத்திலேயே பல கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்திற்கு பிறகு இரண்டு ஆண்டும் ஆகியும் கிடைக்கவில்லை என்பதால் இத்திட்டம் மற்றொரு பின்னடைவை அரசுக்கு ஏற்படுத்துகிறது.

Updated On: 4 Oct 2023 4:03 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
 2. லைஃப்ஸ்டைல்
  New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
 3. சேலம்
  சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
 4. சினிமா
  பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
 5. தமிழ்நாடு
  வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
 6. சிவகாசி
  சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
 7. சினிமா
  சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
 8. தமிழ்நாடு
  வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
 9. சோழவந்தான்
  சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
 10. குமாரபாளையம்
  பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!