சுற்றுலா பேருந்து நிறுத்துமிடங்களை தேர்வு செய்ய வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் தரிசிக்க வந்த வெளி மாநில , மாவட்ட பேருந்துகள்.
கோயில் நகரம் பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் வெளிமாநில மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் திருக்கோயில் தரிசனத்திற்கும், புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலை எடுக்க அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் திருமண விழாக்களுக்கு எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வேன் மற்றும் கார்களில் காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளுக்கு குறிப்பாக காந்தி சாலை நடுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அதிக அளவில் வருவது உண்டு.
சாதாரணமாகவே காஞ்சிபுரம் சாலைகள் பல ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவர்கள் வலம் வருவதும் வரதராஜர் பெருமாள் கோயில் தேர் திருவிழா உள்ளிட்டவைகளை காரணம் காட்டி விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் நீடிக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் என்பது எந்த நேரத்தில் எப்படி ஏற்படும் என்பது யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு காஞ்சிபுரம் நகரம் இருந்து வருகிறது. மேலும் திருமண நாட்களில் மாலை மற்றும் காலை வேலைகளில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரிசையில் அவ்வப்போது நிற்பதும் அதை போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையினர் சரி செய்வதும் என்பது வாடிக்கையான ஒன்று.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கல்லூரிகள் என பல அமைந்துள்ளதும் சென்னை புறநகரில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பேருந்துகளும் அதிக அளவில் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வதாலும், கட்டுமான தொழிலுக்கு மிக முக்கியமான கருங்கல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளதால், கல்குவாரி மற்றும் அதன் தொழிற்சாலைகள் அதிகம் உற்பத்தி செய்து ,சென்னை புறநகர் கட்டிட தொழிலுக்கு பொருட்களை அனுப்ப பி வைக்கப்படுகின்றன. இதற்காக கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வப்போது அரசியல் கட்சியினர் , அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் வருகையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் துறை விதித்து போக்குவரத்து மாற்றங்கள் செய்தாலும் போதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாதது காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் வரும் 48 நாட்களுக்கு ஐயப்ப பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பின் திருக்கோயில் சுற்றுலா செய்வது வழக்கமான ஒன்று அவ்வகையில் காஞ்சிபுரம் திருக்கோவிலுக்கு ஏராளமான வெளி மாநில மாவட்ட பேருந்துகளில் ஐயப்ப பக்தர்கள் வந்திருந்து பல்வேறு திருக்கோயில்களை தரிசிப்பது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால் திருக்கோயில் வளாகம் மற்றும் அதனை சார்ந்த பல பகுதிகளில் நெடுஞ்சாலை ஒட்டி நிறுத்தி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக அந்தந்த திருக்கோயில் பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்தங்களை ஏற்படுத்தி மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.அதற்கான கட்டணங்களையும் அவர்களிடம் இருந்து பெறலாம். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இன்றி அனைவரும் பயணிக்கவும், சுற்றுலா வந்த பக்தர்கள் எந்தவித அச்சமின்றி தங்கள் தரிசனம் மேற்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu