காஞ்சிபுரத்தில் இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

காஞ்சிபுரத்தில் இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை  துவக்கம்
X

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் செல்வம் எம்.பி.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி புதிய இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் , காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கலந்து கொண்டு இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

பின்னர்,ஒவ்வொரு வீடாக சென்று இல்லம் தோறும் இளைஞரணி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியினையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக்,மாநகர செயலாளர்,பகுதி செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!