தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாடு: ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு

தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாடு: ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு
X
காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள, ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுச்சொத்து கணக்கு குழு குழுவினர் இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் , குன்றத்தூர், மாங்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், குழுவின் தலைவரான ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில், ஜவஹீருல்லா, வேல்முருகன், ராஜா, பிரகாஷ், மாரிமுத்து உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர் குழு ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்குப்பின், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், 4மணி நேரம் நடைபெற்றது. இதில் மத்திய தணிக்கைக் குழு அறிவுறுத்தலின்படி அனைத்தும் சீரான முறையில் இருக்கும்படி அனைத்துதுறை அலுவலர்களும் தவறில்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக சட்டப்பேரவை பொதுச்சொத்து கணக்கு குழுவினர், இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மத்திய தணிக்கைக் குழுவின் அறிவுரைப்படி, எந்த ஒரு தவறும் இல்லாமல் அனைத்தும் சரியான முறையில் இருக்க அலுவலர்கள் பணி புரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இன்று நடைபெற்ற ஆய்வின் போது பிள்ளைபாக்கம், செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளால் மாசு பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கை ஒரு மாதத்திற்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.சுதாகர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!