காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட நாள் விழா

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட நாள் விழா
X

சட்ட நாள் விழாவினையொட்டி காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் , நீதிபதி இனிய கருணாகரன் இளம் வழக்கறிஞருக்கு சட்ட புத்தகம் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் சட்ட நாள் தின விழா மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட நாள் தின விழாவையொட்டி மாவட்ட நீதிபதி செம்மல் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றும் , இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ம் ஆண்டு ஆகஸ்டு 15 ம் நாள் ஆகும். சுதந்திர இந்தியாவுக்கு என தனியாக அரசியலமைப்புச் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி இந்திய அரசியல் நிர்ணய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு சட்ட சாசனக் குழு அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 1949 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக வடிவமைக்கப்பட்டு சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் சட்ட தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு உறுதி எடுக்கப்படுகிறது..

அவ்வகையில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் , காஞ்சிபுரம் பார் அசோசியேஷன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து சட்ட நாள் தின விழா மாவட்ட நீதிபதி திரு செம்மல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சட்ட நாள் தின உறுதிமொழியினை மாவட்ட நீதிபதி செம்மல் வாசிக்க, மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்றனர்.இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி செம்மல், கூடுதல் முனிசிப் நீதிமன்ற நீதிபதி திருமதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி இனியா கருணாகரன் , குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டு நீதிபதி வாசுதேவன் உள்ளிட்டோர் இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.


விழாவில் பேசிய மாவட்ட நீதிபதி செம்மல் , இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நன்கு கற்று, வழக்காடும் திறனை வளர்த்து கொண்டு திறம்பட செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், சத்யமூர்த்தி,சங்க தலைவர்கள் ஹரிதாஸ், கார்த்திகேயன், சிவகோபு உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story