செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி (பைல் படம்).
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் மழை காரணமாக காலை 9 மணிக்கு 1000 கன அடி நீராக உயர்த்தப்படுகிறது..
அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மாற்றம், குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் குன்றத்தூரில் 91.6 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் தற்போது 22.35 அடி நீர் உள்ளது. 3.645 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 3.210 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து 514 கன அடி நீர் உள்ள நிலையில் தற்போது 163 கன அடி நீர் வெளியேறி வருகிறது. தொடர் மழை மற்றும் நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்புக் கருதி நேற்று காலை 10 மணிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் 200 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் எனக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் நீர் வெளியேறும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், வழியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதேபோல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 57 ஏரிகள் முழு கொள்ளளவையும் 40 ஏரிகள் 75 சதவீதத்தையும் நீர் இருப்பை பெற்றுள்ளது.
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய பாலாறு உப வடி நிலகோட்ட கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் 189 ஏரிகள் முழு கொள்ளளவையும் 246 ஏரிகள் 75% நீர் இருப்பை பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு நின்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu