ஊக்கதொகை வழங்கதாதல் நிதி நிறுவன முகவர், இயக்குநரிடையே தள்ளுமுள்ளு
சிவ காஞ்சி காவல்நிலையத்தில் நடைபெற்ற விசாரணை.
காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஆருத்ரா கோல்ட் டிரேடிங் எனும் தனியார் நிதி நிறுவனம். இந் நிதி நிறுவனத்தின் முகவராக ஹரிஷ் என்பவர் செயல்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளரை நிதி நிறுவனத்தில் இணைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே காஞ்சிபுரம் முகவர் ஹரிஷ்க்கு சேரவேண்டிய ஊக்கத்தொகை முறையாக தலைமை அலுவலகம் தரவில்லை எனக் கூறி பல்வேறு முறைகளில் கேட்டுள்ளார்.
இந்நிலையில் உத்தரமேரூர் நிதி நிறுவனத்தின் முகவர் இல்ல காதணி விழா காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந் நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜசேகர் வந்துள்ளார்.
இதை அறிந்த காஞ்சிபுரம் முகவர் திருமண மண்டபத்திற்கு சென்று தனக்கு சேரவேண்டிய ஊக்கத்தொகையை அளிக்கும்படி கூறி கேட்டபோது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் இருவரும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காஞ்சி கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் முன்னிலையில் இரு தரப்பினருடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து இதைத் தாங்களாகவே பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என தெரிவித்து புகார் அளிக்க விருப்பமில்லை என ஒப்புதல் கடிதம் எழுதி தந்துள்ளனர்.
இதனால் திருமண மஹால் பகுதி மட்டும் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய பகுதி சிறுது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
அரசு நிதி நிறுவன விதிகளுக்கு புறம்பாக இதுபோன்ற நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், முறையான வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வராததால் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu