காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாண்டி அனல் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் அரசு பொதுமக்கள் தேவையின்றி ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடப்பட்டு அனைவரும் குளிர்ச்சியான பானங்கள் , பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கடந்த ஆண்டு முதலே கோடை காலங்களில் இலவச தண்ணீர் பந்தல் செயல்பட்டு வருகிறது.அவ்வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே , கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பழங்கள், மோர், குளிர்ந்த நீர் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு பொதுமக்கள் , சிறுவர்களுக்கு பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.
கடும் கோடை நேரத்தில் பழங்கள் , மோர் வழங்கப்பட்டதால் சாலையில் சென்ற அனைத்து தரப்பினரும் இதனைப் பெற்று தங்கள் உடல் வெப்பத்தை குறைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் முருகன் , சத்யநாராயணா, முரளி மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu