வாலாஜாபாத் பேரூராட்சியில் ஒரே நாளில் 57 பேர் வேட்புமனு தாக்கல்

வாலாஜாபாத் பேரூராட்சியில் ஒரே நாளில் 57 பேர் வேட்புமனு தாக்கல்
X

மனு தாக்கல் செய்ய வந்த கட்சியினர்.

வாலாஜாபாத் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 59 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி , 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.

அவ்வகையில் வாலாஜபத் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் அடங்கியுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை துவங்கி நேற்று வரை இரண்டு நபர்களே மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, விசிக மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 57 பேர் ஒரே நாளில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

15-வார்டு உறுப்பினர் பதவிக்கான இந்த தேர்தலில் இதுவரை 59 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நாளை ஒரே நாள் மீதமுள்ள நிலையில் மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு