இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் லட்சார்ச்சனை பெருவிழா..!.

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இலட்சார்ச்சனை திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் லட்சார்ச்சனை பெருவிழா..!.
X

வெள்ளி கவசங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி , வள்ளி,  தெய்வானை சமேதருடன்..

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், இளையனார்வேலூர் கிராமத்தில் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். குழந்தை பாலமுருகனாக அமர்ந்து காட்சியளிக்கும் இத்தலம் முருகன் திருத்தலங்களில் காஞ்சி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

அனைத்து திருத்தலங்கள் போல் இங்கு பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா 10 நாள் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும், தை மாதங்களில் மூன்று நாள் மாலை வேளைகளில் தெப்பல் உற்சவம் என வருடந்தோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.


இங்கு வருடந்தோறும் மாசி மாதம் சஷ்டி முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 6 நாட்கள் சிறப்பு இலட்சார்ச்சனை பெருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மற்றும் தை கிருத்திகை அடுத்த இந்த லட்சார்ச்சனை பெருவிழா என மூன்று விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

இலட்சார்ச்சனை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் பெயரை ரூ150 செலுத்தி பதிவு செய்து சங்கல்பம், அர்ச்சனை செய்து கொள்வது வழக்கம்.

அவ்வகையில் மாசி மாத வளர்பிறை சஷ்டியை ஒட்டி கடந்த 10 ம் தேதி துவங்கிய இவ்விழா வரும் 15ம் தேதி வரை 6 காலங்களில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு இலட்சம் வேதமந்திரம் சிவாச்சாரியார்களால் சொல்லப்பட்டு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

அதன் பின் உற்சவர் பால்சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனை செய்யபட்டு கலந்துகொண்ட அனைவருக்கும் கோயில் அர்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.கடைசி தினத்தன்று நண்பகல் 2 மணியுடன் நிறைவு பெறுகிறது.

இலட்சார்ச்சனை விழாவிற்காக ஏராளாமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி‌ ஆணையர் இலட்சுமி காந்த பாரதிதாசன் வழிகாட்டுதல்படி கோயில் செயல் அலுவலர் சுரேஷ், ரவி குருக்கள், மேலாளர் செங்குட்டுவன், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் பக்தர்களுக்கு விழா ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்

வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை அனைத்து வசதிகளும் செய்யபட்டது. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Feb 2024 4:00 AM GMT

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
 2. சென்னை
  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க ...
 3. திருவள்ளூர்
  மீன் இறங்குதளத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் தவிப்பு!
 4. திருப்பரங்குன்றம்
  மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை:பயணிகள் மகிழ்ச்சி
 5. இந்தியா
  உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-டிராலி விபத்து: 23 பேர் உயிரிழப்பு
 6. ஈரோடு
  பட்டியலின தம்பதி மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
 7. ஈரோடு
  சித்தோடு பேரூராட்சியில் ரூ.93.16 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை...
 8. ஈரோடு
  பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 9. ஈரோடு
  அந்தியூர் பேரூராட்சியில் ரூ.23.97 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள்
 10. சென்னை
  சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கல்