காஞ்சிபுரத்தில் தகாத உறவை கணவன் கண்டிப்பு : மனைவி தீக்குளிப்பு
பைல் படம்.
காஞ்சிபுரம் மாவட்டம் , கோளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழிலாளியான இருவருக்கும் பாலா என்பவருக்கும் திருமணம் நடந்து 18 வருடம் ஆகிறது.
இவருக்கு சுமதி என்ற மகள் தென்னாங்கூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகன் கோகுல் ஐயங்கார் குளம் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ரமேஷின் மனைவி பாலா என்பவர் எதிர் வீட்டில் வசிக்கும் சந்திரன் என்பவருடன் கள்ள உறவில் இருந்துள்ளார்.
நேற்று இரவு சந்திரனுடன் மனைவி பாலா தகாத உறவில் இருந்ததை பார்த்து விட்டு கணவன் இன்று காலையில் மனைவியிடம் இரவு எங்கே சென்றாய் என்று கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரமேஷ் சந்திரனிடம் கேட்க வெளியே நின்றுள்ளதை பார்த்த மனைவி பாலா வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உள்ளார்.
இதை பார்த்த ரமேஷ் தீயை அணைத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் அதிக தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu