நான்கு மாதங்களாக சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர்
கம்பீரமாக அணிவகுக்கும் ஊர்க்காவல் படையினர்.
தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு உற்ற துணையாக ஊர் காவல் படையினர் செயல்பட்டு வருகின்றனர். காவல்துறை வெளிமாவட்ட பணிக்கு செல்லும் நிலையில் ஊர்க்காவல் படையினர் இப்பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் இவர்கள் காவல்துறையிடருடன் இணைந்து சட்டம் ஒழுங்கு இரவு பணி , கோயில் திருவிழாக்கள், சாலை போக்குவரத்து சீர் செய்த உள்ளிட்டவைகளுக்கு திறன்பட ஆண் பெண் என இரு பாலரும் செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரு காவல் கோட்டங்களில் சுமார் 130க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதத்தில் 15 நாள் மட்டுமே பணிகள் வழங்கப்படுவதும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 560 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் இவர்களுக்கு எட்டு மணி நேர பணி என்பது முடிவுக்கு வராமல் கூடுதலாக பல மணி நேரம் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. பல்வேறு குடும்ப சூழ்நிலைகளில் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு மாதம்தோறும் இந்த ஊதிய பணம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், இதனைக் குறித்த காலத்திற்குள் வழங்குவது என்பது விரைவில் சரி செய்யப்பட வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தினை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு காவல் துறைக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காவல்துறைக்கு உள்ள சலுகைகள் அனைத்தும் ஊர்க்காவல் படையினருக்கு வழங்குவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வரை இவர்களுக்கு தொடர்ச்சியாக மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என்பதும், இதனால் கூடுதல் வருவாய் தங்கள் குடும்ப வாழ்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu