அச்சிறுப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் , செங்கல்பட்டு மாவட்டம் , அச்சிறுப்பாக்கம் அருகே 700 அடி உயரத்தில் இயற்கை வளத்துடன் கூடிய அழகிய வஜ்ரகிரி மலை உள்ளது.
இம்மலையில் சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இம் மலையில் அரியவகை மூலிகை செடிகள் மற்றும் உயரமான மரங்களும் இயற்கையாகவே அமைந்து வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும் அமைந்து வருகிறது.
இந்நிலையில் இம்மலையில் சிலர் ஆக்கிரமித்து மலை உச்சியில் வேற்று மத வாசகங்கள் எழுதுவதும் அங்கு உருவங்களை வைப்பதும் என இருந்து வருவதாகவும்,
மேலும் அங்கு கட்டிடங்கள் கட்ட முயற்சி செய்து வருவதாகவும், இதை தடுக்கும் வகையில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சிக் கோட்டை இந்து முன்னணி சார்பில் அச்சிறுப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணி மாநில செயலாளர் சுனில் குமார் மற்றும் காஞ்சி மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu