கத்திரி வெயில் முடிந்தது: காஞ்சிபுரத்தில் 30 நிமிடம் கனமழை

கத்திரி  வெயில் முடிந்தது: காஞ்சிபுரத்தில் 30 நிமிடம் கனமழை
X

காஞ்சிபுரம் நகரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாலை பெய்த கனமழை 

கத்திரி முடிந்தும் கடும் வெய்யில் வாட்டிய நிலையில் காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் கோடை வெயில் என அழைக்கப்படும் கத்திரி வெய்யில் தமிழகத்தில் நேற்று முன்தினம் நிறைவுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெய்யில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை அச்சுறுத்தியது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் கடும் கோடை வாட்டிய நிலையில் மாலை 6 மணியளவில் தீடிரென கருமேகம் சூழ்ந்து பலத்த சூரை காற்று வீச தொடங்கியது.

சிறுது நேரத்திலேயே இன் மழை பெய்ய தொடங்கியது. சாலை முழுவதும் நீர்‌சென்றும்‌ , காற்றுடன் கூடிய கன மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமடைந்தனர். 30 நிமிடங்களுக்கு பின் மழை ஓய்ந்ததால் வீடு திரும்பிய அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீடு திரும்பினர். கன மழை பெய்ததன் காரணமாக கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ai as the future