சுவர் விளம்பரங்கள் மூலம் சுகாதார விழிப்புணர்வு

சுவர் விளம்பரங்கள் மூலம் சுகாதார விழிப்புணர்வு
X

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சுற்று சுவர்களில் சுகாதாரம் குறித்து சுவர் விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரதான சாலையில் அமைந்துள்ளதால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்வதை பயன்படுத்தி மருத்துவமனை‌ சுற்று சுவர்களில் சுகாதாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஓவியர் சங்கத்தின் உதவியுடன் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் , கழிவறை பயன்படுத்துதல் , பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் , மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள்‌, மருத்துவமனையில் எந்தெந்த உடல்நலகுறைவிற்கு சிகிச்சை இல்லை என வெளிப்படையாக எழுதியும் , சுகாதார நல் ஒழுக்கம் எவை என்பதை வண்ண ஓவியங்களாக வரைந்துள்ளது பலரை திரும்பி பார்க்க செய்வதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.அரசு அலுவலக சுவர்களில் துறை திட்டங்கள் , அணுகவேண்டிய அலுவலர் விவரங்கள் போன்றவை இது போன்று வெளிப்படையாக இருந்தால் உதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story