காஞ்சிபுரம் சிஎஸ்எம் பள்ளியில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் சிஎஸ்எம் பள்ளியில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

 காஞ்சிபுரம் CSM பள்ளியில் ஆரோக்கிய பாரதி இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரோக்கிய பாரதி இயக்கத்தின் சார்பில் சிஎஸ்எம் பள்ளி மாணவிகளுக்கு ஆரோக்கியம் , மன நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரோக்கிய பாரதி என்னும் இயக்கம் நாடு முழுவதும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்பொழுதைய சூழலில் மக்களின் ஆரோக்கியத்தை குறித்து எழும் அச்சத்தை போக்கும் விதமாகவும், நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் CSM மேல்நிலைப் பள்ளியில் பயிலும் +1மாணவிகளுக்கு இன்று ஆயுர்வேத மருத்துவர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு நேர்மறை ஆற்றல் , உடல் நலம் பேணிக்காக்க நோயற்ற வாழ்வு வாழ உண்ண வேண்டிய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள் மற்றும் மனநலம் எளிதாக்கும் பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அதன் மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இந்நிலையில் பள்ளி ஆங்கில ஆசிரியர் சங்கீதா , ஆரோக்கிய பாரதி இயக்க இணைசெயலாளர் டாக்டர் நிஷா மற்றும் பள்ளி ஆசிரியைகள் , மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!