போலி பட்டுசேலை குறித்து முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை, கைத்தறிதுறை அமைச்சர் காந்தி

ஏரிக்கரை அண்ணா நெசவாளர் குடியிருப்பில் நெசவாளர் வீட்டில் நெசவு நெய்வது குறித்து கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் திரு காந்தி இன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை, முதன்மை பட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர வீடுகளில் நெசவு குறித்து ஆய்வு மேற்கொண்டு நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கைத்தறித் துறை பொறுப்பேற்ற பின் முதன்முறையாக காஞ்சிபுரத்திற்கு ஆய்வுக்கு வந்துள்ளதாகவும் , காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஜரிகை ஆலை 3000 மார்க் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் திறனான 4550 மார்க் உற்பத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனால் வெளியில் இருந்து வாங்கப்படும் 2000 மார்க்குகள் குறைக்கப்படும் .
காஞ்சிபுரத்தில் போலி பட்டு தயாரிக்கப் பட்டால் அது குறித்து முறையான புகார் தெரிவிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.
காஞ்சிபுரத்தில் அண்ணா பட்டுக் கூட்டுறவு வளாகம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கைத்தறித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா , ஆணையர் பீலா ராஜேஷ் , மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சிவிஎம்பி எழிலரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu