காஞ்சிபுரத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீட்டினில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பொருட்களை விற்பனை செய்வது பெரும் குற்றம் எனவும் இதனை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் அவ்வப்போது தங்கள் காவல் பகுதி எல்லைக்குள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி தொழிற்சாலைகள் என அதிக அளவில் உள்ள நிலையில், தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக அதிக அளவில் வடமாநிலத்தவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ளனர்.

பொதுவாகவே வடமாநிலத்தினர் பான்பொருட்களை பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மினிலாரி மற்றும் கார்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை எடுத்து வரும்போது இது குறித்த தகவல்கள் அறிந்து காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்வதீர்த்த குளக்கரை அருகே ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியினை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வாடகை வீடு ஒன்று எடுத்து அங்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் பொருட்களை பறிக்க வைத்திருந்தது தேடி வந்து உடனடியாக அந்த வீட்டை காவல் துறையினர் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story