மாரத்தான் போட்டியில் பரிசுகளை அள்ளிய கோவிந்தவாடி கிராம விளையாட்டு குழு
கோவிந்தவாடி அகரம் கிராம விளையாட்டு குழுவினர்
காஞ்சிபுரத்தில்75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நேரு யுவகேந்திரா நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து மாரத்தான் சுதந்திர ஓட்டம் 2.O நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார். இதில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் வெற்றிபெற்ற இருபிரிவுகளில் தலா மூன்று பரிசுகள் அளிக்கபட்டது. இதில் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விளையாட்டுக் குழு சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் +1 மாணவன் சுகுமார் , 7ம் வகுப்பு மாணவி யாஸ்மிகா, 10ம் வகுப்பு மாணவி வினிதா ஆகியோர் பரிசுகளை வென்றனர்.
இது குறித்து இளம் பயிற்சியாளர் சதீஷ் கூறுகையில், தாம் பயின்ற விளையாட்டு கல்வியை தமது கிராம இளம் மாணவர்கள் கற்கும் விதமாக பயிற்சி அளித்ததாகவும், பயிற்சிக்கு போதிய மைதானம் தங்கள் கிராமத்தில் இல்லை என்றும், இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி இருந்தும் விளையாட்டு மைதானம் முறையாக இல்லாததால் பயிற்சி அளிப்பதில் கடினம் ஏற்படுகிறது. இன்று கலந்து கொண்ட மாணவர்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கலந்து கொண்ட அனைவரும் குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைந்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடைசி இலக்கை அடையும் போது கவனமின்மை காரணமாக அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu